• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோக்கியா ஜி20, 3 நாட்கள் பேட்டரி திறன், 3 ஆண்டு செக்யூரிட்டிகளுடன் அறிமுகம்

July 27, 2021 தண்டோரா குழு

நோக்கியா ஜி20 அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நோக்கியா போன்களை தயாரித்துவரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய ஜி-சீரிஸ், பொருத்தமான மற்றும் பயனர்களை மையப்படுத்திய தொழில்நுட்பத்தின் மூலமாக வாடிக்கையாளர்களின் அனைத்து தினசரித் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான அனைத்து அம்சங்களையும்,அருமையான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீளும் பேட்டரி திறன், உங்களது தரவுகளை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையிலான மூன்றாண்டு கால செக்யூரிட்டி அப்டேட்கள், இரண்டு ஆண்டுகளுக்கான ஓஎஸ் அப்டேட்களை கொண்டுள்ளது நோக்கியா ஜி20.

வைட் ஆங்கிள் மற்றும் மேக்ரோ லென்ஸ், ஆற்றல்மிக்க ஏஐ இமேஜிங் மோட்கள், ஒசோ ஆடியோ மற்றும் போதுமான சேமிப்பு நினைவகம் உள்ளடக்கிய 48எம்பி க்வாட் கேமிரா உடன் நோக்கியா ஜி20 எந்த நேரத்திலும் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் தயார் நிலையில் உள்ள க்ரியேட்டிவ் ஸ்டூடியோவை போல செயல்படும்.

சன்மீத் சிங் கோச்சார், துணைத் தலைவர், ஹெச்எம்டி குளோபல் கூறுகையில்,

2021-ல் எங்களது நான்கு மிகமுக்கியமான அறிமுகங்களில் ஒன்று நோக்கியா ஜி20. மாபெரும் திறனுடன் எங்களது ரசிகர்களுக்கு ஒரு முழுமையான ஸ்மார்ட்ஃபோனாக நோக்கியா ஜி20 இருக்கும். நீண்ட காலத்திற்கு நீடிக்கும் தன்மையை இதற்கு வழங்கிய எங்களது மிகச்சிறப்பான மொபைல் கட்டமைப்பு திறனுக்கும், தனித்துவமான ஆண்ட்ராய்ட் வாக்குறுதிக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.

பிரீமியம் டிசைன், சமீபத்திய நவீன அம்சங்கள், சமரசமில்லா பாதுகாப்பு போன்ற தேவைகளைக் கொண்டுள்ள எங்களது நவீன ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டுதான், இந்த ஸ்மார்ஃபோனை வடிவமைத்து உருவாக்கி யிருக்கிறோம். ஹெச்எம்டியைப் பொறுத்தவரை, புதுமைகளில் மனிதர்களுக்கு முதலிடம் கொடுக்கும் அணுகுமுறையையே பின்பற்றுகிறோம். இது, நாங்கள் உருவாக்கும் ஸ்மார்ட்போன்களில் வெளிப்படுகிறது. நீங்கள் உங்களது ஸ்மார்ட்ஃபோன்களை விரும்புகிறீர்கள் என்பதையும், உங்களது தரவுகள் மீது நம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும், நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த எண்ணுகிறீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம் நீங்கள் நேசிக்கும், நம்பும், எப்போதும் கொண்டிருக்கும் ஒரு ஸ்மார்ட்ஃபோனாக நோக்கியா ஜி20 அமையும்.

ஆற்றல்மிக்க மூன்று அம்சங்கள் மீடியாடெக் ஜி35 ப்ராசசரால் இயக்கப்படும் நோக்கியா ஜி20, மூன்று நாட்களுக்கு நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுள் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது; இதனால், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை ஏதுமில்லாமல் நீங்கள் விரும்பியதை மேற்கொள்ளலாம். இதில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஆண்ட்ராய்ட்ட 11 ஆனது, ஒரு தடையற்ற முறையில், பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தவும், அவற்றை மாற்றிக்கொள்ளவும் வகை செய்யும். முகம் மற்றும் பக்கவாட்டு விரல்ரேகை மூலமாக அன்லாக் செய்யும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு மாதம்தோறும் செக்யூரிட்டி அப்டேட்களையும், இரண்டு ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்கிரேடுகளையும் வழங்க வேண்டுமென்ற ஹெச்எம்டி க்ளோபலின் அர்ப்பணிப்பு, உங்களுக்கு நம்பகமான ஸ்மார்ட்ஃபோனாக நோக்கியா ஜி20 விளங்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.

நோக்கியா ஜி20-ல் ஒரு 48எம்பி க்வாட் கேமிராவும், 8 எம்பி முன்புற கேமிராவும் உள்ளன. முன்பக்க கேமராவுடன் மிகப்பெரிதாக இருக்கும் டியர்ட்ராப் டிஸ்ப்ளே, எளிதாக பிரகாசத்தை அதிகரிக்கும் அம்சங்களுடன் கூடிய ஒரு 6.5 ஹெச்டிூதிரையும் இதில் உண்டு. ஒசோ ஸ்பேஷியல் ஆடியோவுடன் கூடிய நோக்கியா ஜி20, தடையற்ற தொழில்நுட்ப அனுபவத்தையும் படைப்பாற்றல் மற்றும் கலை மீதான வேட்கையைக் கட்டவிழ்த்துவிடும் வகையிலான பயன்பாட்டையும் வழங்கி நவீன படைப்பாளர்களுக்கான மிகச்சிறந்த கருவி ஆகிறது.

மிக உயர்ந்த வடிவமைப்பு தரம், மிகச்சிறப்பான எளிய நேர்த்தியான நோர்டிக் வடிவமைப்பு உடன், நைட் மற்றும் க்ளேசியர் எனும் இரு வண்ணங்களில் குறைவான எடை, மெல்லிய தடிமன், நீடிக்கும் மேற்புறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி20. உங்களது வேகம் நிறைந்த வாழ்க்கையின் தினசரிப் பயன்பாட்டின்போது கடுமையாக உழைக்கும் வகையில், அனைத்து நோக்கியா ஹேண்ட்செட்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கைகளில் வைத்து கொள்ள சௌகரியாமாகவும், பாக்கெட்டுக்குள் அடங்கும் வகையிலான நோக்கியா ஜி20-ன் 3டி நானோ-டெக்சர்டு ரியர் கவர் உங்கள் கைகளை விட்டு எளிதில் நழுவாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

வகைகள், விலை மற்றும் கிடைக்கும்தன்மை நைட் மற்றும் க்ளேசியர் ஆகிய கருப்பு, வெள்ளை வண்ணங்களில், 4ஜிபி/64ஜிபி ரோம் உடன், ரூ.12,999 எனும் மிகச்சிறப்பான விலையில் நோக்கியா ஜி20 கிடைக்கும். Nokia.com/phones தளத்திலும், அமேசானிலும் இதன் விற்பனை தொடங்குகிறது.

நோக்கியா ஜி20-க்கான முன்பதிவு, அமேசான் மற்றும் நோக்கியா.காம் இணையதளத்தில் தொடங்குகிறது.

நோக்கியா ஜி20-க்கான சலுகை அமேசான் அல்லது Nokia.com/phones தளத்தில் நோக்கியா ஜி20-யை முன்பதிவு செய்தால், இதன் விலையில் இருந்து ரூ.500*யை வாடிக்கையாளர்கள் தள்ளுபடியாகப் பெற முடியும் அல்லது புதிதாக நோக்கியா ஜி20 உடன் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்டையும் வாங்கினால் ரூ.2,099* வரை சிறப்பு தள்ளுபடியாகப் பெறலாம்.

மேலும் படிக்க