July 26, 2021
தண்டோரா குழு
மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஏர் கலப்பையுடன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக கர்நாடக அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 65 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க சட்டத்திற்கு புறம்பாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பலரும் போராடி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி,மற்றும் துணை தலைவர் பெரியசாமி தலைமையில் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்காதே,கர்நாடக அரசே தமிழகத்திற்கான தண்ணீரை தடுக்காதே என 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதில் அன்னூர் வட்ட மயில்சாமி, கோட்டூர் மணி, தொண்டாமுத்தூர் தங்கராஜ், பொள்ளாச்சி விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.