July 24, 2021
தண்டோரா குழு
கோவை சாய்பாபாகோவில் பகுதியில் உள்ள ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் நாகசாயி அறக்கட்டளை சார்பாக குரு பூர்ணிமா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி குருபூர்ணிமா விழா நடைபெற்றது.
காலை காகட ஆர்த்தி, அபிஷேகம், ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி,மற்றும் நாகசாய் பஜனுடன் மத்தியான ஆரத்தியுடன் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.விழா குறித்து நாகசாயி அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,விஸ்வநாத் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் கூறுகையில் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும்,மகா அன்னதானம் இல்லாமல் பக்தர்களுக்கு பிரசாதம் மட்டுமே இந்த ஆண்டு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
குரு பூர்ணிமா விழாவில் கலந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.