July 23, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் மதியத்திலிருந்து விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
கோவையில் கடந்த மாதம் வெயில் அதிகமாக இருந்த நிலையில், ஜூலை தொடக்கத்திலும் அதே நிலை இருந்தது. இருப்பினும், கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் நல்ல மழை பெய்தது. இரவு நேரங்களில் குளிரும் துவங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்தது.
தொடர்ந்து, இன்று காலையில் வெயில் இருந்தபோதிலும்,மதிய வேளையில் இருந்துமாநகர,புறநகர பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது.