July 22, 2021
தண்டோரா குழு
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்ற மருந்தாளுனர்கள், ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் நுண்கதிர் படபிடிப்பாளர்கள் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் மற்றும் நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு
பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12,000 வீதம் 6 மாதங்களுக்கு மட்டும்
பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதன்படி மருந்தாளுநர் 17 பேரும், ஆய்வக நுட்புனர் 17 பேரும், நுண்கதிர்
படப்பிடிப்பாளர் 17 பேரும் தேவைப்படுகிறார்கள். பணியிடங்களுக்குரிய தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட 2 தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள இணை
இயக்குநர், மருத்துவம் மற்றும்
நலப்பணிகள் அலுவலத்தில்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும் நேர்முகத்தேர்வு வரும்
வரும் ஆகஸ்ட 3ம் தேதி காலை 10 மணிக்கு, கோவை மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.