• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா விதிமீறில்: கோவையில் 2 கடைக்கு சீல்

July 21, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவையில் காய்கறி, மளிகை, நடைபாதையில் பூ, பழம் விற்பனை செய்யும் கடைகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 6b மணி முதல் மாலை 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு கடைகள் தினந்தோறும் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஷோரூம்கள் உள்பட சில கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்போது கடைகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வெரைட்டி ஹால் ரோட்டில் செயல்பட்டு வந்த பர்னிச்சர் கடை மற்றும் ‌அவினாசி ரோட்டில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் கடை அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நேற்று இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் தலைமையில்‌ மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு‌‌ 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க