• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகையுடன் கொண்டாடிய இஸ்லாமியர்கள்

July 21, 2021 தண்டோரா குழு

இஸ்லாமிய மக்களின் பண்டிகையான பக்ரீத் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஈகைத்திரு நாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜமாத்தில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இஸ்லாமிய மக்கள் உற்சாகத்துடன், முகக்கவசம் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து குர்பானி எனப்படும் நிகழ்வு மூலம் ஆடு அல்லது மாட்டினை இறைவனுக்கு படைத்து அவற்றின் இறைச்சியை ஏழை எளியோருக்கு வழங்கப்படும் என தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க