• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனச்சரகங்களில் வனவிலங்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது வனத்துறையினர் தகவல்

July 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் எட்டு வனச்சரகங்கள் உள்ளடக்கி கோவை மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது.இதில் போலுவம்பட்டி, மதுக்கரை,காரமடை,மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்ஆகிய வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியை ஒட்டியும் சிறுமுகை,
மேட்டுப்பாளையம், வனச்சரகங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியும் உள்ளது.

இந்த வனச்சரகங்களில் யானை, புலி,சிறுத்தை,கரடி,மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.வனவிலங்குகளை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்களும்,வனப் பணியாளர்களும் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வன குற்றங்கள் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அண்மையில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகங்கள் யானை,புலி,சிறுத்தை, காட்டெருமை,செந்நாய், அரிய வகையான கழுதைப்புலி ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது வனத்துறையினர் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

வனப்பகுதிக்குள் நல்ல சீதோசன நிலை நிலவுவதால் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க