• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பாம்புகள் தினம் இன்று – பாம்புகள் பற்றி நாம் அறிந்ததும், அறியாததும் !

July 16, 2021 மு, சிராஜ்தீன்

உலகம் முழுவதும் ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும்.பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.ஆனால் பெரும்பாலான பாம்புகள் விஷத்தன்மை அற்றவை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள்.குறிப்பாக:-சினிமாக்களில் காட்டப்படும் பாம்புக்கதைகளை நம்பவேண்டாம்.

உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன.இதில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 5 வகை பாம்புகள் அதிம் காணப்படும் விஷத்தன்மை கொண்டவைகள்

1, நல்ல பாம்பு
2 , கண்ணாடி விரியன்
3 , கட்டு விரியன்
4 , சுருடை விரியன்
5 , ராஜநாகம்

(ராஜநாகம் அதிகம் மழைக்காடுகளில் மட்டுமே வசிக்கும்) இவைகளுக்கு மட்டுமே விஷமுண்டு.

மற்ற நான்கு வகை பாம்புகள் மனிதர்கள் வசிப்பிடங்களைச் சுற்றியும் வாழும் தன்மை கொண்டவை .பெரும்பாலான பாம்புகள் மனிதனைக்கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. நாம் அதை சீண்டாத வரை அது யாரையும் தீண்டுவதிலை.முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது .

பாம்புகள் மனித நடமாட்டத்தை கண்டால் ஒளிந்து விடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை விட பாம்புகளுக்கு நம்மீது பயம் அதிகம். இதில் விரியன் வகை பாம்புகள் நம்மை கண்டால் ஒளியாமல் அதே இடத்தில் சுருன்டுக் கொள்ளும் .

பம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்…?

பதற்றப்படாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்யவும்.

பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது?

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சக் கூடாது. பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமாக எதையும் கட்டக் கூடாது. பாம்பு கடித்த இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் கீரக்கூடாது.கடித்த பாம்புகளை அடிக்கவோ,பிடிக்கவோ முயலக் கூடாது .அடித்து இறந்த பாம்புகளின் உடலைக் கூட கவனமாக கையாள வேண்டும். ஏனெனில் இறந்தபின்னும் பாம்புகளின் நரம்பு மண்டலம் சிறிது நேரம் செயல்படும்.

பாம்புகளை பார்த்தால் பிடிக்கவோ அடிக்கவோ கூடாது உடனே வன துறைக்கு தகவல் கொடுக்கவும்.வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும்
சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளது அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தாலோ, அடித்தாலோ, ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொன்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

நமது வனங்களும் வன உயிரினங்களும் மதிப்பு மிக்கவை அவற்றை அழியாது பாதுகாப்போம்…!

மேலும் படிக்க