• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் 2021 விருது

July 15, 2021 தண்டோரா குழு

டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் 2021 விருது கௌரவத்தின் முதல் பதிப்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஃபிஷர் பம்ப்ஸ், சான்வி அக்ரிகல்ச்சரல் ப்ராடக்ட்ஸ் மற்றும் மகேந்திரா பம்ப்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் கவுரவ விருது என்பது அடிமட்டத்திலிருந்து பங்காற்றி தேசிய பொருளாதார நிலை வரை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தி,மாற்றத்தை உருவாக்குபவர்களின்,பன்முகத்தன்மை மற்றும் இடைவிடாத பங்களிப்புகளைக் கௌரவித்து அங்கீகரிக்கும் ஒரு முன் முயற்சியாகும். சர்வதேச எம்.எஸ்.எம்.இ தினத்தையொட்டி இந்த கௌரவம் மற்றும் விருது வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.

மேலும் 250 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் மற்றும் தகுதியான ஜி.எஸ்.டி பதிவு கொண்ட அனைத்து வகையான வணிகங்களுக்கும் இந்த கௌரவம் மற்றும் விருதுகள் பொருந்தும். ஃபிஷர் பம்ப்ஸ் நிறுவனம் ஐடியா ஐகான் (புதுமைச் சிந்தனை அடையாளம்) என்ற பிரிவில் கௌரவத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் முன்கள சுகாதார ஊழியர்களுக்கு காற்று சுத்திகரிப்பு சுவாசக் கருவியைக் கண்டுபிடித்ததற்காக இந்த நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உபகரணங்கள் (பிபிஇ கிட்) பிரிவில் இது வருகிறது. இது 99.9 சதவீத சுத்திகரிக்கப்பட்ட காற்று மற்றும் முழு முகப் பாதுகாப்பை வழங்குகிறது.

சான்வி அக்ரிகல்ச்சரல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் எஸ். ஆனந்தி மற்றும் எஸ் பரமேஸ்வரி ஆகியோர் வியக்கத்தக்க பெண்கள் பிரிவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். நிலையான விவசாய பொருட்கள் பிரிவில் புதுமைகளை கண்டுபிடித்ததற்காகவும், வெற்றிகரமான வணிகத்தை ஏற்படுத்தியதற்காகவும், வணிகத்தில் பெண்களை ஊக்குவித்து சிறந்த அடையாளமாகத் திகழ்வதற்காகவும் இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.மலர் வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் சரியான தரமானவற்றைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கில் இவர்களின் அனைத்து தயாரிப்புகளும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் வெவ்வேறு கட்டங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இவை தயாரிக்கப்படுகின்றன.

மறுபுறம் மகேந்திர பம்ப்ஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக மோட்டார்கள் மற்றும் பம்புகள் சந்தையில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காக பிசினஸ் வெட்ரன் (புகழ்பெற்ற தொழில் நிறுவனம்) பிரிவில் இது கௌரவிக்கப்பட்டுள்ளது.

தமது முதல் பதிப்பில், டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ், தமிழ்நாட்டில் 7 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும் (எம்.எஸ்.எம்.இ.), நாடு ழுழுவதும் 81 நிறுவனங்களையும் கௌரவித்துள்ளது. நான்கு மண்டலங்களில் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களில் ஐந்து பிரிவுகளில் கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன:

பிசினஸ் வெட்ரன்ஸ் (முன்னணி தொழில் நிறுவனங்கள்):

பல்வேறு காலகட்டங்களில் பல சோதனைகளத் தாண்டி, தொடர்ந்து செழித்து வளர்ந்து வரும் உறுதியான நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்:

புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலைத் தழுவி சாதனை படைக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

வியக்கத்தக்கபெண்மணிகள் எம்எஸ்எம்இ-ஸ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் வியக்கத்தக்க பெண்மணிகள்:

பழைமைவாத கட்டுப்பாடுகளை மீறி, தங்கள் வணிக பயணத்தை நம்பிக்கையுடன் வரையறுத்த பெண் தொழில்முனைவோரைகளை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

சோஷியல் பேட்ரன்ஸ் :

லாபம் ஈட்டுவதற்கு முன் சோதனைக் காலங்களிலும் சமூகத்திற்கு உதவி செய்தவர்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

ஐடியா ஐகான்ஸ் (புதுமைச் சிந்தனை அடையாளம்):

மாற்றத்தை வழிநடத்தும் கருத்துக்கள் மற்றும் புதுமைச் சிந்தனைகளை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க