July 15, 2021
தண்டோரா குழு
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு சிரஞ்சி ஊசிகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் அவ்வப்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தநிலையில் கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காலி சிரஞ்சி ஊசிகளை மத்திய அரசுக்கு அனுப்பி தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கி தரும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.