December 2, 2016 தண்டோரா குழு
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களால் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளது என்று ஜல்லிக்கட்டுப் பேரவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு விளையாட்டு வெறும் பந்தயமோ பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, சில அமைப்புகள் வழக்கு தொடுத்ததை அடுத்து, இவ்விளையாட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றம் 2௦14ல் தடைவிதித்தது. இதற்குத் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிண்டன் நாரிமன் அமர்வு முன் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இந்த வழக்கைக் கையாள ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகர் கலந்து கொண்டார்.
பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஜல்லிக்கட்டு கிராமங்களில் நடைபெறும் ஒரு பாரம்பரிய விழா. இளைஞர்கள் வீரத்துடன் அதை அடக்கும் போது காயம் அடைவது வழக்கம். ஆனால் காளைகள் காயமடைவதில்லை. இந்த விழா 2௦௦௦ ஆண்டுகளாக நடைபெறுகிறது என்று மத்திய அரசு வழக்கறிஞர் நரசிம்மன் வாதிட்டார்.
ஜல்லிக்கட்டு என்றால் காளைகளைத் துன்புறுத்துவது என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்து. இதை நீதிமன்றமும் ஏற்று, அரசிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அரசின் பதிலில் திருப்தி அடையாததால் நீதிமன்றம் தடையை நீக்க மறுத்தது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு பல வாதங்களை முன் வைத்தது. பல நூற்றாண்டுகளாக கிராமங்களில் நடக்கும் கலசார திருவிழா, காளைகளைத் தெய்வமாக பாவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்று வாதிடப்பட்டது. வாதத்தின் வலிமையால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும்.