கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை சுண்டக்காமுத்தூர் ரோடு சேத்துமாவாய்க்கால் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். அதே போல் பாலாஜி நகர் பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஆத்துப்பாலம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். பின்னர் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு குளக்கரையினை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.அப்போது இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) சுந்தரர்ராஜ் உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு