July 14, 2021
தண்டோரா குழு
அபுதாபியைச் சேர்ந்த ஆங்க்லோ கல்ஃப் ட்ரேட் வங்கியின் சிஓஓ ரமேஷ் நாகேஷ் மற்றும் சிங்கப்பூரில் டாய்ச் பேங்கின் முன்னாள் நிர்வாக இயக்குநரான நூர் ஹயாதி ஆகிய இருவரும் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தில் இணைகின்றனர்.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள், தகவல் தொழில்நுட்ப துறை தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாக, உலகளவில் தனக்கென ஒரு ப்ரத்யேக இடத்தை தக்க வைத்திருக்கிறது கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (கேஜிஎஸ்எல்) நிறுவனம்.கோவையைச் சேர்ந்த இந்நிறுவனம் தன்னுடைய வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுக்கும் யுக்திகளை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வங்கித்துறையில் மிகச்சிறப்பான தலைமைத்துவப் பண்புகளை கொண்ட, குறிப்பிடத்தக்க சாதனைகளை தங்கள் வசம் வைத்திருக்கும் மூன்று வல்லுநர்களை முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்வதாக இன்று அறிவித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் 1000 கோடி வருவாயை எட்ட வேண்டுமென்ற இந்நிறுவனத்தின் இலக்கை, வளர்ச்சிக்கான யுக்தியை முன்னெடுப்பதில், ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய வங்கி துறையில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள இந்த மூத்த நிதி வல்லுநர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.
கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தில் செயல்பாட்டு யுக்தி பிரிவின் தலைமை அதிகாரியாக ஸ்ரீநாத் போலோஜு இணைகிறார். அதேபோல், ரமேஷ் நாகேஷ் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், நூர் ஹயாதி அஹ்மத் சிங்கப்பூரில் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நாடு தழுவிய செயல்பாட்டு தலைவராகவும் இணைகிறார்கள்.
இதுகுறித்து கேஜிஐஎஸ்எல் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசோக் பக்தவத்சலம், கூறுகையில்,
வங்கி துறையில் பிஎஃப்எஸ்ஐ பிரிவில் வலுவான செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனமாக கேஜிஐஎஸ்எல் வளர்ச்சிப் பெற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். இதற்கு, எங்களுடைய தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்பாட்டு யுக்திகளை முன்னெடுப்பது மிக அவசியமாகும். இந்நிலையில், தற்போதுள்ள திறமைமிக்க தலைமைக்கு ஸ்ரீநாத் போலோஜு, ரமேஷ் நாகேஷ், நூர் ஹயாதி அஹமத் ஆகிய மூன்று பேரின் ஆழ்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் கைக்கொடுக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த இவர்களது அனுபவம் உதவும் என்றார்.
கேஜிஐஎஸ்எல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரசாத் சண்முகம் கூறுகையில்,
கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் இவர்கள் மூவரும் இணைவது எங்களது அதிர்ஷ்டம். வங்கி துறையில் சாதனைகளை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஸ்ரீநாத், தனது தொழில்ரீதியான வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார்ரமேஷ், வங்கித் துறையில் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறன்களுக்காக நன்கு அறியப்படுகிறவர்; தனது துறையில் உச்சநிலையை நோக்கி வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் இவர் கேஜிஐஎஸ்எல் நிறுவனம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினால், எங்களுடன் கைக்கோர்த்திருக்கிறார்.
ஆழ்ந்த அனுபவமுள்ள வங்கி நிபுணரான ஹயாதி, சிங்கப்பூர் மற்றும் உலகளவில் இத்தொழில்துறையில் ஆழமான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். இவர்கள் மூவரும் தற்போது செய்து கொண்டிருப்பதையே தொடர்ந்திருக்கலாம்.அல்லது பிஎஃப்எஸ்ஐ துறையில் அவர்களுக்கு இருக்கும் ஏராளமான வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்திருக்கலாம்.ஆனால் அதற்கு பதிலாக, இவர்கள் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, செயல்பாட்டு யுக்தி மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் இருக்கும் உறுதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த மூவருடனான உறவு எங்கள் இலக்குகளை மிக விரைவாக எட்டுவதற்கு உதவும் என்றார்.
நிதிச் சேவைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த அனுபவமுள்ள, திறமைமிக்க வணிகத் தலைவராக இருக்கும் ஸ்ரீநாத் போலோஜு கேஜிஐஎஸ்எல் நிறுவனத்துடன் தலைமை செயல்பாட்டு யுக்தி அதிகாரியாக இணைகிறார். பல்வேறு தளங்களில் விற்பனை, தயாரிப்பு மேலாண்மை, தொழில்நுட்பம், செயல்பாடுகள் மற்றும் நிர்வாக ஆளுகை ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
மேலும் வங்கி மற்றும் நிதி தயாரிப்புகளை செயல்படுத்துவதிலும் திறமைமிக்கவர். வெகு சமீபத்தில் இவர் சிட்டிபேங்கில் நிர்வாக இயக்குநராகவும் தெற்காசிய செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.இதற்கு முன்னதாக, அவர் டாய்ச் வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் காணும் முயற்சிகள், டிஜிட்டமயமாதலை முன்னெடுப்பதில் செயலாற்றிய தலைமைக் குழுவில் அங்கம்
வகித்திருக்கிறார்.
கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தில் சிஎஸ்ஓ-வாக பணியாற்ற இருக்கும் ஸ்ரீநாத் இந்தியாவில் மும்பையில் இருந்து பணிபுரிவார். கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் எதிர்கால வெற்றிப்பயணத்தில், முக்கிய சந்தைகள் மற்றும் துறைகளில் நிலையான மற்றும் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்க மூத்த தலைவர்களுடன் ஸ்ரீநாத் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவார்.
ரமேஷ் நாகேஷ் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தில் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இணைகிறார். இந்தியாவில் இவர் பெங்களூரில் இருந்து பணியாற்றுவார். பிராந்திய மற்றும் உலகளாவிய ஆபரேட்டிங் யூனிட்களை நிர்வகிப்பதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உடையவர். அபுதாபியைச் சேர்ந்த ஆங்கிலோ கல்ஃப் ட்ரேட் வங்கியின் சி.ஓ.ஓ.வாக பணியாற்றிய பின்னர், இவர் கேஜிஐஎஸ்எல் உடன் தற்போது இணைந்துள்ளார். இவர் ஆங்கிலோ கல்ஃப் ட்ரேட் வங்கியில் பணிப்புரிந்த போது, உலகின் முதல் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும், தரவு சார்ந்த வணிக வங்கியை ஆரம்ப நிலையில் இருந்து முழுவதுமாக கட்டமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். ரமேஷ் டாய்ச் வங்கி, ஏபிஎன்-அம்ரோ வங்கி, ஏஎன்இசட், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் ஆர்.பி.எஸ். போன்ற பன்னாட்டு வங்கிகளின் தலைமைக் குழுவில் இடம்பெற்று பணியாற்றிய அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நாடு தழுவிய செயல்பாட்டு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நூர் ஹயாதி அஹ்மத் 35 ஆண்டுகள் அனுபவமிக்கவர். குறிப்பாக இதில் க்ளோபல் ட்ரான்ஸ்சாக்ஷன் பேங்கிங், உலகளாவிய பரிவர்த்தனை வங்கி, மணி மார்க்கெட்ஸ், எஃப்எக்ஸ், நிதி மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச வங்கியியல் துறையில் அனுபவம் உள்ளவர். சிங்கப்பூரில் உள்ள சர்வதேச வங்கிகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணிபுரிந்திருக்கும் இவர், உள்ளூர் சந்தை, தொழில்நுட்ப போக்குகள் மற்றும் நிதிச் சேவைத் துறையின் செயல்பாட்டுத் தேவைகளை நன்றாக புரிந்து கொண்டிருப்பவர். இந்த நியமனத்திற்கு முன்னதாக இவர் டாய்ச் வங்கி, ஹாட்ஸ்டாண்ட், சோனிக் மற்றும் காஷ்டெக் டெக்னாலஜி ப்ரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் மூத்த தலைமைக் குழுக்களில் ஒருவராக திறம்பட பணியாற்றியவர்.
தனது நியமனம் குறித்து, கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு யுக்தி அதிகாரி ஸ்ரீநாத் போலலோஜு கூறுகையில்,
வாடிக்கையாளர்களுடன் நீண்டகால ஈடுபாட்டை, உறவை உறுதிசெய்யும் வலுவான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் கேஜிஐஎஸ்எல் பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தீர்வுகள் வழங்கும் நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் அதே வேளையில், இந்த அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுவில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தனது புதிய பொறுப்பு குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ரமேஷ் நாகேஷ் கூறுகையில்,
கேஜிஐஎஸ்எல் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மற்றும் திறன் மிக்க நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற கலாச்சார ரீதியாக மாறுபட்ட, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவமுள்ள திறமைமிக்க குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் அவர்களின் முழு திறனையும் கட்டவிழ்த்து வகையில், விநியோக திறன்களை மேம்படுத்துவதில் இக்குழுவுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.
சிங்கப்பூரில் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நாடு தழுவிய செயல்பாட்டு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நூர் ஹயாதி அஹ்மத் கூறுகையில்,
சிங்கப்பூரில் கேஜிஎஸ்எல் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்நிறுவனத்தின் லட்சிய வளர்ச்சியை அடைவதற்கும், அதற்கான செயல்பாட்டு யுக்திகளை துரிதப்படுத்தவும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். உலகில் இன்று லண்டன், நியூயார்க்கிற்கு பிறகு உலகின் மூன்றாவது நிதி மையமாக சிங்கப்பூர் உள்ளது. அதனால் வங்கி மற்றும் நிதித்துறையில் எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்துவதும், இப்பிராந்தியத்தில் எங்களது செயல்பாடுகளை வலுவாக்குவதும் மிக முக்கியம் என்றார்.