• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்..? கேட்கும்போதே தலைசுத்தது – நடிகர் வடிவேலு !

July 14, 2021 தண்டோரா குழு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து முதலமைச்சர் என்னிடம் பேசினார். அவரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன்” என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டு, மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார்.பெண்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் என்று கூறினார்.

மேலும், கொங்கு நாடு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு,ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன…நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்..? கேட்கும்போதே தலைசுத்தது என்றார்.அப்போது மீண்டும் பழையபடி அதிக படங்களில் உங்களைப் பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க