July 14, 2021
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாகவும், ட்ராக்டர் உற்பத்தி எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய ட்ராக்டர் நிறுவனமாகவும் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் தனது புதிய பொலெரோ நியோ-வை அறிமுகப்படுத்தியது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா டீலர்ஷிப்களிலும் இந்த புதிய வாகனம் கிடைக்கிறது, புதிய பொலெரோ நியோவின் N 4 வேரியண்ட்டின் விலை ரூ. 8.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் எக்ஸ்எக்ஸ்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய பொலிரோ நியோ,எந்த சூழ்நிலையிலும் கட்டுக்கோப்பான உறுதியுடன் இருக்கும், ஒரு உண்மையான அதே நேரம் சமகால பாணியிலான, நவீன தோற்றத்திலான எஸ்யூவி வாகனத்திற்கான தேடலுடன் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் ஒன்றாக அறிமுகமாகி இருக்கிறது.மேலும் தற்போது சாலைகளில் வலம்வரும் பொலெரோ, சந்தையில் பொலெரோ நியோவுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
எம் அண்டு எம் லிமிடெட்டின், ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நாக்ரா கூறுகையில்,
பொலெரோ நியோ, எந்த சூழ்நிலையிலும் கட்டுக்கோப்பான உறுதியுடன் இயங்கும், அபாரமான ஆற்றல் கொண்ட, எங்கு வேண்டுமானாலும் கம்பீரமாக பயணிக்கும் வலிமையுடைய வாகனத்தை எதிர்பார்க்கும் சமகால வாடிக்கையாளர்களின் நவீன எதிர்பார்புகளையும், அவர்களது ஆளுமையையும், லட்சியங்களையும் ஒன்றாக இணைக்கும் எஸ்யூவியாக அறிமுகமாகி இருக்கிறது புதிய பொலெரோ நியோவின் அட்டகாசமான வடிவமைப்பு, அபாரமான செயல்திறன் மற்றும் அசத்தலான பொறியியல் மேம்பாட்டு அம்சங்கள், வலிமையான மற்றும் அச்சமற்ற இன்றைய இளம் இந்தியாவிற்கு ஏற்ற ஒரு நவீன, அசல் எஸ்யூவியாக முன்னிறுத்தி இருக்கின்றன.
எங்கள் ப்ராண்ட் போர்ட்ஃபோலியோவில் பொலெரோ நியோவையும் தற்போது இணைத்திருப்பதன் மூலம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 எஸ்யூவிகளில் பொலெரோவிற்கான தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் என்றார்.
நவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் சௌகரியமளிக்கும் அம்சங்களுடன் உருவாகி இருக்கும் பொலெரோ நியோ அதிகரித்து வரும் இன்றைய இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்காக ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆட்டோமோட்டிவ் டிசைனர் ஃபினின்ஃபரினா வடிவமைத்திருக்கும் ஸ்டைலான புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் ப்ரீமியம் தரத்திலான உட்புற தோற்றம், சௌகரியமான கேபின் வசதி மற்றும் தரமான இரட்டை ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்டிரிபியூஷன் உடனான ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், மற்றும் கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ஐஎஸ்ஓஃபிக்ஸ் குழந்தை இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் அடங்கும்.
மேலும் புதிய பொலெரோ நியோ, ஸ்கார்பியோ அண்டு தார் ஆகிய கம்பீரமான வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட சேஸிஸ்சின் 3-வது தலைமுறை சேஸிஸ் மூலம் பொலெரோ நியோ கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் தனது அபாரமான ஆற்றலை சாலைகளில் நிரூபித்துக் காட்டியிருக்கும் மஹிந்திரா எம்ஹாக் எஞ்சினுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எம் அண்டு எம் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் உலகளாவிய தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் வேலுசாமி ஆர் கூறுகையில்,
ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய இரு வாகனங்களின் வடிவமைப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சேஸிஸ்சின் மூன்றாம் தலைமுறை சேஸிஸ் கொண்டு கட்டமைக்கப்பட்ட, பொலெரோ நியோ சக்திவாய்ந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தனித்துவமான எஸ்யூவியாக அறிமுகமாகி உள்ளது. அதன் கட்டுக்கோப்பான உடல்-கட்டமைப்பின் கட்டுமானம், இந்திய சாலைகளில் தனது ஆற்றலை நிரூபித்திருக்கும் மஹிந்திரா எம்ஹாக் டீசல் எஞ்சின் மற்றும் எந்தவிதமான நிலப்பரப்பிலும் அனாயசமாக பயணிக்கும் ஆற்றலை அளிக்கும் மல்டி டெரெய்ன் டெக்னாலஜி ஆகியவை பொலெரோ நியோவுக்கு கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் திறனையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.
அனைத்து முக்கிய அம்சங்களுடனும் ஒரு முழுமையான வாகனமாக, பொலெரோ நியோ தயாரிப்பு தரம், செயல்திறன், எஸ்யூவியின் முக்கிய குணாதிசயங்கள் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் மீது நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் ஒரு தனித்துவமான தயாரிப்பாக அறிமுகமாகி இருக்கிறது என்றார்.
புதிய பொலெரோ நியோவில் புகுத்தப்பட்டு இருக்கும் நவீன மேம்பாட்டு அம்சங்கள் அதன் தனித்துவ குணாதிசயம் மற்றும் வாகனத்தின் அழகியல் தோற்றத்தில் மட்டுமில்லாமல் 100 ஹெச்பி எம்ஹாக் எஞ்சின், கடினமான உறுதியுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் உடல் பகுதி மற்றும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க உதவும் செயல்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றிலும் புகுத்தப்பட்டுள்ளன.மேலும், இதன் ஆன் ஃபிரேம் கன்ஸ்ட்ரக்ஷன், பின்புற சக்கரம் இயக்கம் மற்றும் மல்ட்டி டெரெய்ன் தொழில்நுட்பம் ஆகியவை நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
புதிய பொலெரோ நியோ, சௌகரியமாக அமர்வதற்கு ஏற்ற ஒரு விசாலமான 7 இருக்கைகள் கொண்ட வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் இவ்வாகனம் மூன்று வகைகளில் (என் 4-பேஸ், என் 8-மிட், என் 10-டாப் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் (ராக்கி பீஜ், மெஜஸ்டிக் சில்வர், ஹைவே ரெட், பேர்ல் ஒயிட், டயமண்ட் ஒயிட், நெப்போலி பிளாக் மற்றும் ராயல் கோல்ட் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய பொலெரோ நியோ, ஜூலை 13, 2021 முதல் மஹிந்திரா டீலர்ஷிப்பில் கிடைக்கும்.