• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

July 13, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரத்தினபுரி நேரு பூங்கா வளாகத்தில் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனைகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் சளி, காய்ச்சல், இருமல் குறித்த விபரங்களை கொரோனா கள ஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து நஞ்சப்பா சாலை ஜெயில்ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க