July 13, 2021
தண்டோரா குழு
வைதேகி நீர்வீழ்ச்சி அருகே நேற்று இரவு வந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குற்றாலம் சுற்றுலா வேன் ஓட்டுநர் விஜயகுமாரும் அங்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள நுழைவு வாயில் அருகே விஜயகுமார் நின்ற போது, மற்றொரு காட்டு யானை திடிரென வந்து
விஜயகுமாரை தந்தத்தால் தாக்கி, தூக்கி வீசியது.
இதில் இரு கால்கள், முதுகு பகுதிகளில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகே இருந்த வனத்துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.