July 13, 2021
தண்டோரா குழு
இறந்த பெண் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் எதிரொலி,கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை வன சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் 15 வயது பெண் யானை இறந்து கிடப்பது கண்டறிந்து, அங்கு கால்நடை மருத்துவர்கள் உடன் சென்ற வனத்துறையினர், யானை உயிர் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில்,யானையின் உடற்பகுதி மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்திருப்பது தெரியவந்தது.
யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும் என்று அறிந்த வனத்துறையினர் யானையின் ரத்த மாதிரிகளை சேகரித்ததோடு, யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டால் வனப்பகுதியில் ஆந்திராக்ஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதால், யானையை எரியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆனைகட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட,கால்நடை துறைக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.