July 12, 2021
தண்டோரா குழு
கோவையில் கோழி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சில நாட்களாக கோழிகள் காணாமல் போய் உள்ளது. இந்நிலையில்,
நேற்று இரவு பண்ணையில் கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு உரிமையாளர் சுபேர் அலி சென்று பார்த்த பொழுது வாலிபர் கோழியை தூக்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருடனை பிடித்து மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விசாரணையில் மரப்பட்டை பொட்டு மேட்டை சேர்ந்தவிஷ்ணு பிரதாப் கோழியை வழக்கமாக திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோழியை பறிமுதல் செய்துவாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.