July 12, 2021
தண்டோரா குழு
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஓட்டி சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகன இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டது. இப்பிரச்சார வாகன விழிப்புணர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரை முருகன் துவக்கி வைத்தார்.