July 11, 2021
தண்டோரா குழு
வி வாடிக்கையாளர்கள் தங்களது தடுப்பூசிக்கான முன்பதிவு திட்டமிடலை எளிமையான முறையில், தங்குதடையின்றி மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன், வி தனது வி ஆப் அப்ளிகேஷனில், தடுப்பூசி கிடைக்குமிடம், நேரம் குறித்த தகவல்களை அளிக்கும் கோவின் அப்ளிகேஷனின் ஸ்லாட் ஃபைண்டர் அம்சத்தை ஒருங்கிணைத்துள்ளது. இதன்மூலம் இனி வி வாடிக்கையாளர்கள், தங்களது வி ஆப்பிலேயே தடுப்பூசி எங்கே கிடைக்கிறது, எந்த நேரம் போட்டுக்கொள்ளலாம் என்பதற்கான முன்பதிவை செய்யலாம்.
முன்பதிவு குறித்த தகவல் தெரிவிக்கும் நோட்டிஃபிகேஷன் வசதியையும் பயன்படுத்த முடியும். இதனால் வி வாடிக்கையாளர்கள் தங்களது கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவை தங்களது மொபைல் ஃபோனிலேயே எளிதில் செய்து முடித்துவிடலாம். வேறெங்கும் போக வேண்டிய அவசியமில்லை.
வி வாடிக்கையாளர்கள் தங்களது தடுப்பூசி தொடர்பான தேடலை, வயது, தடுப்பூசியின் பெயர்கள் கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி, டோஸ், கட்டண தடுப்பூசி மற்றும் இலவச தடுப்பூசி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளலாம். அதேபோல் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில், கொடுக்கப்பட்டுள்ள ஸ்லாட்களில் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யலாம். வி ஆப் மூலம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பகுதியில் தடுப்பூசி கிடைக்கும் குறித்த விவரங்கள் நோட்டிபிகேஷனாக தெரிவிக்கப்படும்.
இந்த சேவை வி நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கும்.வி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட 3 எளிமையான வழிமுறைகளில் தங்களுக்கான தடுப்பூசிக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.MyVi.in மற்றும் www.vodafoneidea.com ஆகிய இணையதளங்களை அணுகலாம்.