July 11, 2021
தண்டோரா குழு
அதிமுக கட்சி அலுவலகத்தில் 2 ஆம்புலன்ஸ்கள். வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறந்து வைத்து வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம் குறைகளைத் தட்டிக் கேட்போம். முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேட்டியளித்தார்.
அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு, ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழா ஆகியவற்றை எஸ். பி வேலுமணி துவக்கி வைத்தார்.பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
கோவை மாவட்ட மக்கள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.நாங்கள் அம்மாவுடைய ஆசியுடன் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு மக்களுக்கு செய்ய நினைத்ததை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அதற்காக இன்று கோவை அதிமுக வழக்கறிஞர்கள் கட்சி அலுவலகத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக நூலகம் திறந்து.கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்காக எந்த சூழ்நிலையிலும்
தொடர்ந்து பாடுபடுவோம்.ஆளுங்கட்சியில் ஏற்படும் குறைகளை மக்களுக்காக தொடர்ந்து போராடி தீர்வு காணப்படும்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பொதுமக்கள் வாக்களித்து பத்து அதிமுக எம்எல்ஏக்களை தந்துள்ளனர். ஆதலால் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்காக உங்களுடைய எம்எல்ஏக்கள் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இரட்டை சகோதரர்களாக செயல்படக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அவர்களின் உடைய வழிகாட்டுதலின்படி மக்களுடைய தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுத்து,மக்கள் மனங்களில் என்றும் நிறைந்து இருப்பார்கள் என்றார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் கொங்கு நாடு தனி யூனியன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண் குமார், கே.ஆர்.ஜெயராமன் உட்பட 10 எம்எல்ஏக்கள் உடன் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.