• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக ஏ.ஜி.எஸ்.ஹெல்த் கேரில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மையம் !

July 10, 2021 தண்டோரா குழு

தமிழகத்தின் முதலாவது அங்கீகாரம் பெற்ற ஸ்புட்னிக் வி தடுப்பூசி மையம் கோவை சாயி பாபா காலனியில் ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை சாயிபாபா காலனி பகுதியில் ஏஜிஎஸ் ஹெல்த்கேரில் முதலாவது மாநில அரசின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அங்கீகாரம் பெற்ற மையமாக இருக்கிறது.

இந்த மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில்,

“இந்த மையத்தில் வரும் ஜூலை 12 முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள்ளதாகவும் கோவையில் முதல் முறையாக ஏஜிஎஸ் ஹெல்த் கேரில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர், காவல்துறையினர், மூத்த குடிமக்கள், திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள், இணைநோய் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி செலுத்த கோவின் இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதல் தவணை செலுத்திய பின்பு இரண்டாவது தவனையாக 21நாட்களில் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க