• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

July 5, 2021 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைப்படி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கட்டும் கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் காட்டனசெந்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பீகே தினகரன் கோவை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் சிவராமன், கோவை மாவட்ட அவைத்தலைவர் கேபிஎஸ் தங்கராஜ், மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் சிங்கைச் சந்துரு, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் துரை, மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் எம்.எஸ் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,
பி.ஜே.எஸ் பாபு,தலைமை செயற்குழு உறுப்பினர் ராகவலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க