June 30, 2021
தண்டோரா குழு
கோவை மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்கென 26 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெறுவதாக ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம்,மாவுத்தம்பதி ஊராட்சியில் மரங்கள் நடுவது,பிளாஸ்டிக் விழிப்புணர்வு,மற்றும் கொரோனா விழிப்புணர்வு பணிகளை ஊராட்சி நிர்வாகம் திறம்பட செய்து வருகின்றது.இந்நிலையில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி கிராமம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த கிராமத்தில் வசிக்கும் சந்தியா மாணவ,மாணவிகளுக்கு பாடம் நடத்தியதால் அனைவரின் கவனத்தையிம் ஈர்த்துள்ளார்.இந்நிலையில் மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார்,சின்னாம்பதி கிராமத்தில் திறமையான கால்பந்து விளையாடும் மாணவர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளித்தால் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் இந்த கிராமத்திலேயே உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.மேலும் ஊராட்சி சார்பாக பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பாக இந்த பகுதி மக்களுக்கென 26 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.