• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரிமா மாவட்டம் 324 C மற்றும் 324 D ஆகிய இரு அரிமா மாவட்ட ஆளுநர் பதவியேற்பு விழா காணொளி வழியாக நடைபெற்றது.

June 30, 2021 தண்டோரா குழு

கோவையில் அரிமா மாவட்டம் 324 C மற்றும் 324 D ஆகிய இரண்டு அரிமா மாவட்ட புதிய ஆளுநர் பதவியேற்பு விழா ராம் நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவு உறுப்பினர்கள் நேரிலும் மற்றும் பலர் ஆன்லைன் வழியாகவும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2021-22 ஆம் ஆண்டிற்கான 324 C ன் புதிய ஆளுநராக நடராஜன் முதல் பெண்மணி கலாமணியுடனும், 324 D புதிய ஆளுநராக குப்புசாமி முதல் பெண்மணி சசிகலாவுடனும் பொறுப்பேற்று கொண்டனர்.இருவருக்கும் சிகாகோவிலிருந்து அரிமா சங்கங்களின் சர்வதேச தலைவர் டக்ளஸ் எக்ஸ்.அலெக்சாண்டர் பதவி பிராமணம் செய்து வைத்தார்.

ஆளுநர் கருணாநிதி மற்றும் பன்னாட்டு இயக்குனர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னால் ஆளுநர்கள் ஆறுமுகம் மணி சண்முகம் சிங்கமுத்து டாக்டர் பழனிச்சாமி சசிகுமார் தங்கப்பழம் ஆறுமுகம் காளி சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.அரிமா மாவட்ட 324 C முதல் நிலை ஆளுநர் ராம்குமார்,இரண்டாம் நிலை ஆளுநர் ஜெயசேகரன் மற்றும் 324 D ன் முதல் நிலை ஆளுநர் ஜான் பீட்டர்.,இரண்டாம் நிலை ஆளுநர் மோகன்குமார், மக்கள் தொடர்பு தலைவர் அரிமா செந்தில்குமார்
மாவட்ட செயலாளர் நிர்வாகம் சூரி நந்தகோபால்,செயல்பாட்டு செயலாளர் உதயகுமார்,நிர்வாக பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயல்பாட்டு பொருளாளர் பிரகாஷ்,எக்ஸிகியூட்டிவ் செக்ரெட்டரி ரவிச்சந்திரன், ராஜ்மோகன்,தொழில்நுட்ப பிரிவு சங்கர்,டைரிகமிட்டி தலைவர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் மண்டல,மாவட்ட,வட்டார மற்றும் சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க