கோவையில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் இணைந்து நடத்தும் GIRL UP FEMBOTS சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மதிய உணவை வழங்கப்பட்டது.
யுனைடெட் நேஷன் பஙுண்டேஷனின் கிளை அமைப்பாக கோவையை தலைமையிடமாக கொண்டு Girl up fembots எனும் தன்னார்வ அமைப்பு பல்வேறு சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வருகிறது.முழுக்க சுமார் 200 கல்லூரி மாணவ,மாணவியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் Girl up fembots சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் துணை தலைவர் தீக்ஷா,செயலாளர் அதுரக்ஷனா, நிகழ்ச்சி இயக்குனர் ஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,உறுப்பினர்கள் அக்ஷயா, ஹரிஹரன்,கேசவ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு சமூக பணிகளை நடத்தி வருவதாகவும்,குறிப்பாக ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராம பெண்களுக்கு நாப்கின் வழங்குவது, கல்வி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு