June 29, 2021
தண்டோரா குழு
ஜெய்ஹிந்த் தொடர்பான விவகாரத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி அகில பாரத மக்கள் கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.
அண்மையில் சட்டமன்றத்தில் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவன தலைவரும் ஆன கொங்கு ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை ஆளுநனர் உரையில் இல்லாததை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க.உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக மத்திய உள் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அருகில் தபால் நிலையத்திற்கு வந்த அகில பாரத மக்கள் கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சருக்கு தபால் அனுப்பினர்.
இது குறித்து நிறுவன தலைவர் ராமநாதன் கூறுகையில்,
பாரதநாட்டின் பெருமைய கூறும் சொல்லான ஜெய்ஹிந்த் குறித்து தவறான அர்த்தத்தில் பயன்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும்,மேலும் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடிதம் அனுப்பும் நிகழ்வில்,அகில பாரத மக்கள் கட்சியின்,மாநில செயலாளர்.Dr.சரவணன் மாநில செய்தி தொடர்பாளர் மணிகண்டன் மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா மாவட்ட துணைத்தலைவர் சேகர்,மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் .நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.