June 28, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை “பாகுபலி”யை பிடித்து ரேடியோகாலர் பொருத்தும் பணியை நேற்று வனத்துறையினர் துவங்கினர்.மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த வனப்பகுதிக்குள் சென்றனர்.
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டன.இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.