June 28, 2021
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோவை மாநகர் பகுதிகளில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கோவை மாவட்டத்திலுள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021 – 2022 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இன்று முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை அன்றைய தினமே இணையதளத்தின் மூலம் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் இப் பணிகளை துவங்க பள்ளிகளும் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் செய்ய வேண்டும் மேலும் தகுதியான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.