• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனைக்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் ஆக்சன் எய்டு அமைப்பு வழங்கல்

June 21, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனைக்கு இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான 40 ஆக்சிசன் செறிவூட்டும் இயந்திரங்கள் தனியார் தொண்டு நிறுவனம் சார்ப்பில் பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.இதன் காரணமாக நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கோவை,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கிவ் இந்தியா(Give India) மற்றும் ஆக்சன் எய்டு என்கிற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஐந்து லிட்டர் கொள்ளவு கொண்ட இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான 40 ஆக்சிசன் செறிவூட்டும் இயந்திரங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கபட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆக்‌ஷன் எய்ட்(Action Aid) என்ற அமைப்பின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கபட்ட இயந்திரங்களை அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவர்(பொறுப்பு) பொன்முடி செல்வனிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன்,

மக்கள் இந்த கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட தமிழக அரசின் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த நிகழ்வின் போது ஆக்சன் எய்ட் அமைப்பின் மண்டல மேலாளர் எஸ்தர் மரிய செல்வம் மாவட்ட நிர்வாகி இனியன் மற்றும் சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, திவிக நிர்வாகி நேருதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க