• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யோகாவில் அசத்தும் பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டியின் கொல்லு பேத்தி !

June 21, 2021 தண்டோரா குழு

மறைந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டியின் கொல்லு பேத்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,பல்வேறு வகையான ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தனது தள்ளாத வயதிலும் யோகா செய்து பத்மஸ்ரீ வருது பெற்றவர் மறைந்த நானம்மாள் பாட்டி. கோவையை சேர்ந்த இவரின் மகள் வழி கொல்லு பேத்தி கனித்ரா.ஏழு வயதான இந்த சிறுமி தனது தாயாரும் நானம்மாள் பாட்டியின் பேத்தியுமான மதனிகா நடத்தி வரும் யோகா பயிற்சியை கூர்ந்து கவனித்ததில்,ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே யோகா கலையை கற்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஏழு வயதான சிறுமி கனித்ரா,கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பேக்வார்டு பிரிவு யோகாவில் முதலிடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று அனைவருக்கும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது வீட்டிலேயே கண்டபேராண்டாசனம், பூர்ணகலாபசானம், திருவிக்ரமாசனம் போன்ற ஆசனங்களக செய்து அசத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

உலக அளவில் நமது பாரம்பரிய யோகாவின் பெருமை யை கொண்டு சேர்க்கும் விதமாக யோகா செய்வதாக குறிப்பிட்ட சிறுமி,யோகா செய்தால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார்.

மேலும் படிக்க