June 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடை உரிமையளார்கள், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் ஒரேநாளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.1 கோடியே 37 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.