• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

June 18, 2021 தண்டோரா குழு

தேசிய மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.இந்திய மருத்துவர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடவள்ளி பகுதியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் இந்தியாவில் உள்ள மருத்துவர்களைப் பாதுகாக்க தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரி, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதனை வலியுறுத்தி வலியிறுத்தி கோசங்களை எழுப்பினர்.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் ரவிக்குமார் கூறுகையில்,

இந்தியாவில் சமீப காலமாக மருத்துவர்களை நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பலத்த காயம் அடைந்தும் சிலர் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய அவர் மருத்துவப்பணிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

எனவே தேசிய அளவிலான மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நோய்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு கவனத்தில் கொண்டு மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோயாளிகளின் உறவினர்கள் அத்துமீறிய செயல்களை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க