June 17, 2021
தண்டோரா குழு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இருந்த காவி உடை திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைபடம் பொருத்தப்பட்டுள்ளது. கருத்த தலைமுடி மற்றும் தாடியுடன், வெள்ளை நிற உடலில் காவி உடையுடன் திருவள்ளுவர் அமர்ந்து இருப்பது போன்ற படம் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பு குரலை எழுப்பினர்.இந்நிலையில்,கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு, வெள்ளை உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் புகைபடம் வைக்கப்பட்டது.