• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கல்

June 16, 2021 தண்டோரா குழு

கோவையில் 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு வழங்கிய பழங்கள் தொகுப்பை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் கடந்த 97 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் இணைந்து தங்களது வெள்ளி விழா ஆண்டான 25 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.இந்நிலையில் இதனை நினைவு கூறும் விதமாக,கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய முடிவெடுத்தனர்.

அதன் படி 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற சத்தான பழங்கள் தொகுப்பை வழங்க முடிவு செய்தனர். இதற்கான நிகழ்வில் கோவையில் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வரும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மற்றும் நோயாளிகள் என சுமார் 500 பேருக்கு பழங்கள் தொகுப்பை வழங்கினார்.

மேலும் படிக்க