June 15, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள், தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர்ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட் மற்றும் சாய்பாபா காலனி பகுதியில் செயல்படும் மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் மொத்த காய்கறி கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மெக்ரிக்கர் சாலையில், தூய்மை பணியாளர்களால் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வரும் பணிகள், மாநகராட்சி எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் களப்பணியாளர்கள் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பணிகள், நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, மாநகர பொறியாளர் லட்சுமணன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.