• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத்தயாராக இருக்கவேண்டும் – மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

June 15, 2021 தண்டோரா குழு

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத்தயாராக இருக்கவேண்டும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்குச் சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்திடவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படவேண்டும். குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக்கால பணிக்காக தயார்ப்படுத்திடவேண்டும்.பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்ப்படுத்திடவேண்டும்

கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கொரோனா 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள் தயாராக இருக்கவேண்டும். கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன்காரணமாக குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்கவேண்டும்.

ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளும் ஐசியு வசதியுடன் படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். அதேபோல் குழந்தைகள் மருத்துவ பிரிவில் நான்கில் ஒரு செவிலியர் அவசரக்கால பணி செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க