June 15, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் ஜூன் 15ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுகிறது.இதனை தொடர்ந்து கோவை வடவள்ளி பகுதியில் உனவுத்துறை அமைச்சர் சக்கரபாணி 14வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2ஆயிரம் கொரோனா நிவாரணம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுத்து துவக்கி வைத்தார்.இதில் முன்னாள் அமைச்சர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர்.