June 15, 2021
தண்டோரா குழு
கோவை, ஆலாந்துறை அருகே ஒரு வீட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,
ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது,போளுவாம்பட்டி சேர்ந்த சம்பத்குமார், 38 என்பவர், வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்காக வைத்திருந்த, 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்,10 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு ஸ்கார்பியோ கார்,காஸ் ஸ்டவ்,2 சிலிண்டர், 210 கிலோ நாட்டு சக்கரை,ஒரு கிலோ கடுக்காய்,ஒரு கிலோ ஜாதிக்காய்,ஒரு கிலோ அதிமதுரம், 90 காலி வாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து,சம்பத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.