• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடமாடும் இருசக்கர வாகன ஆக்சிஜன் சேவை துவக்கம்

June 15, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரானா இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முறையான வழிகாட்டுதல்களையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.அதன்படி ஆக்ஸிஜன் சர்வீஸ்களையும் கோவை மாநகரம் முழுவதும் 7 இடங்களில் பேரிடர் மையத்தை தொடங்கி பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில்,இன்று கோவை உக்கடம் கோட்டைமேட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் கொரானா ரீலிஃப் சென்டரில் வைத்து நடமாடும் இருசக்கர வாகன ஆக்சிஜன் சேவை துவங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர்கள் A.அப்துல் ரஹ்மான், K.முஜீபுர் ரஹ்மான் , N. உபைது ரஹ்மான் மற்றும் டிவிஷன் தலைவர்கள், டிவிஷன் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புதான் முதன் முதலில் கொரானா ரீலிஃப் சென்டரினை அமைத்து பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க