June 14, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இரத்ததானம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உயரதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில்
இரத்த தானம் செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்,
மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்த தானம் செய்தனர்.
உயர் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்த நிகழ்வு அனைவராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.