June 13, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் ராஜாமணி.இவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு,பதிலாக புதிய ஆட்சியராக எஸ்,நாகராஜன் நியமிக்கபட்டு பொறுப்பேற்றார். இவர் தற்போது நில நிர்வாக துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு சுற்றுலா துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல நாகப்பட்டினம்,அரியலூர்,திருப்பத்தூர், வேலூர்,விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை,மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 54 ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.