June 12, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனராக குமாரவேல் பாண்டியன் பணியாற்றி வருகிறார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 14-ம் தேதி கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ராஜகோபால் சுங்கரா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். 2015-ல் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி அவர் பயிற்சிக்கு பின் 2017 ஜூலை முதல் தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தார்.தமிழகத்தை கஜா புயல்கள் ஒக்கி தாக்கியபோது பேரிடர் மேலாண்மையில் தீவிரமாக பணியாற்றி பாராட்டை பெற்றார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் தெற்கு மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கோவை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ராஜகேபால் சுங்கரா கூறுகையில்,
“கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாக கோவைக்கான கண்காணிப்பு அலுவலர்கள் சித்திக் மற்றும் வீரராகவராவ் ஆகியோரிடம் பேசி உள்ளேன்.இதுவரை பணிகளை விளக்கியதோடு அறிவுரை வழங்கியிருக்கின்றனர். சென்னையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு கைகொடுக்கும். வரும் 14-ம் தேதி கோவையில் பொறுப்பேற்க உள்ளேன்,” என்றார்.
இவரது மனைவி லட்சுமி பவ்யாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். அவர் மேற்கு வங்கத்தில் பணியாற்றுகிறார்.