• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதிச்சான்று கேட்டு அடம்பிடிக்கும் அதிகாரிகள் சிக்கலில் சிறு,குறு தொழில்நிறுவனங்கள்

June 12, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்கின்றது. இந்த ஊரடங்கு சட்டத்தைகாலத்திலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதன்படி விவசாய இயந்திரங்கள், ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள், ராணுவ உபகரணங்கள், மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும்,
ஏற்றுமதி செய்யும் தொழில்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையின் படி இயங்கும் தொழிற்சாலைகளை, சோதனை
செய்ய அதிகாரிகள் வருகின்றனர்.

அப்போது சோதனைக்கு வரும் அதிகாரிகள் செயல்படும் தொழில்நிறுவனங்களில், மாவட்ட
கலெக்டர் கொடுத்துள்ள அனுமதி கடிதம் உள்ளதா? என கேட்கின்றனர்.ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனியாக அனுமதிச்சான்று எதும் வழங்கப்படவில்லை. சோதனை செய்யும் அதிகாரிகள் இதை ஏற்கமறுத்து அபாராதம் விதிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அனுமதிச்சான்று இல்லை என்றால் தொழிற்சாலையை மூடும்படி நிர்ப்பந்தம்
செய்கின்றனர்.இதனால் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வரும் ஒருசில தொழிற்சாலைகளும்முடக்கப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில்,அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு
மாவட்ட கலெக்டர் அனுமதிச்சான்று வழங்கும் முறை உள்ளதா? என்பதை தெளிவுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.அனுமதிச்சான்று வழங்கப்பட்டால் விண்ணப்பிக்க
தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க