கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உருமாறிய கொரொனா பாதிப்பால் பலர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பபடுகின்றது என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா நோய்கிருமியின் தாக்கம் தற்போது பொது மக்களிடையே பரவிவந்த போதிலும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்பட்டு நோய்த்தொற்று பொதுமக்களை பாதிக்காவண்ணம் அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.கோயம்புத்தூர் மாநகராட்சி நஞ்சுண்டாபுரத்தில் அதிகமான அளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு பொது மக்களிடையே அதிகளவில் பரவியுள்ளதாகவும் அதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதாக சில விசமிகள் பொய்யான தகவலை பரப்பிவருகின்றனர்.
நஞ்சுண்டாபுரத்தில் நோய்தாக்கத்தை கண்டறிய இதுவரையில் மொத்தம் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதில் கடந்த 10 நாட்களில் 56 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுவீடாக சென்று காய்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு இருப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன.எனவே பொதுமக்கள் இதுமாதிரியான பொய்யான வாந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இப்பொய்யான தகவல் பரப்பிய விசமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு