• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரிரு வாரங்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் -அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

June 10, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் நாகராஜன் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரு மாத காலமாக கொரொனா தொற்றை தடுப்பதில் இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருகின்றது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் கொரோனா தொற்று 50 சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளது.ஒரிரு வாரங்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தற்கு தேவையான கொரோனா ஊசிகளை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நகர் பகுதிகளில் மட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொற்று இருப்பதால் கிராமங்களில் மேற்கொள்ளபடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.மாவட்டத்தில் அனைத்து கொரோனா தடுப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் 50 சதவீதம் அளவு குறைந்து இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் சிலர் கொரோனா தொற்றை அரசியலாக்க முயல்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பவர் இல்லை. அவர் பதவி ஏற்ற 30 நாட்களுக்குள் இரு முறை கோவை வந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

மேலும் கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
கோவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிவாரண உதவிகள், நோய்தடுப்பு பணிகள் என அவர்களே நேரடியாக முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை அவர்கள் செய்யக் கூடாது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை கோவை மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ க்கள் ஏற்படுத்த கூடாது. எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தற்போது யுத்த காலத்தில் இருப்பதால் கொரொனா தடுப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றது. தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றபடும். கோவை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று இறப்பும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க