• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் நூதன போராட்டம்

June 8, 2021 தண்டோரா குழு

முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் ரயில் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி ஆகியோருக்கு டுவிட்டரிலும் அனுப்பி வைத்தனர்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உள்பட பல்வேறு துறையினர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கக்கோரி எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் கோவை குட்செட் சாலை அருகே பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜோன்ஸ் சபாஸ்டியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு.வை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.அத்துடன் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி ஆகியோருக்கு டுவிட்டரிலும் அனுப்பி வைத்தனர்.

எஸ்.ஆர்.எம்.யு.வை சேர்ந்த ஜோன்ஸ் சபாஸ்டியன் கூறும்போது,

இந்த இக்கட்டான காலகட்டத்தில் சரக்கு ரெயில் சேவை மூலம் ரெயில்வே துறைக்கு வருமானம் ஈட்டி தருகிறோம்.இதுவரை ரெயில்வேயை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே எங்களையும் முன்களபணியாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க