June 7, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
2 முறை முதலமைச்சர் கோவைக்கு வந்து கொரொனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில் தற்போது 60 சதவீதம் வரை தொற்று குறைந்துள்ளது. கருப்பு பூஞ்சை
பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகள் அதிக்கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார்.
எல்லா மருத்துவமனைகளில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப் படும். தனிமைபடுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சூயஸ் திட்டம் ரத்து செய்வது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார். தடுப்பூசி வந்தவுடன் கிராமங்கள் தோறும் ஊசி போடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனம் முழுமையாக இருக்கின்றது என்றார்.